ஆப்நகரம்

Tom Moody: ரிஷப் பண்ட் அடித்ததில் கதறி அழுத டாம் மூடி!

ப்ளே ஆஃப் சுற்றின் வெளியேற்றும் போட்டி (Eliminator) டெல்லி - ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைப்பெற்றது. இதில் டெல்லி அணி அசத்தலாக ஐதராபாத்தை வென்று அடுத்த தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Samayam Tamil 9 May 2019, 1:03 pm

ப்ளே ஆஃப் சுற்றின் வெளியேற்றும் போட்டி (Eliminator) டெல்லி - ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைப்பெற்றது. இதில் டெல்லி அணி அசத்தலாக ஐதராபாத்தை வென்று அடுத்த தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Samayam Tamil Pant


ஐபிஎல் டி20 தொடர் மிக சிறப்பான தருணத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றின் வெளியேற்றும் போட்டியில் ஐதராபாத் அணி டெல்லி அணியை விசாகப்பட்டிணம் மைதானத்தில் எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஐதராபாத் 162 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர் ப்ரித்வி ஷா ஆரம்பம் முதல் அதிரடி காட்டி அரைசதம் அடித்து அசத்தினார்.

SRH DC Trolls: அடேய் வார்னர் எங்கடா போன... போன் பண்ண கலீல் - SRH V DC அசத்தல் மீம்ஸ்கள்

ஐதராபாத் நம்பிக்கை:
தொடக்கம் நன்றாக அமைந்தாலும், டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கை கொண்டிருந்தது.

ஐபிஎல் பைனலுக்கு வந்துட்டு பேசுறோம்டா நாங்க: ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

ரிஷப் பண்ட் அதிரடி:
ஆனால் ஐதராபாத் அணியின் நம்பிக்கையை தகர்ப்பது போல ரிஷப் பண்ட் விளையாடினார். கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில், 18வது ஓவரை பசில் தம்பி வீசினார். இந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 4 6 4 6 என பண்ட் அடித்து அசத்தினார்.

வெறும் 2 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல்., பைனல் டிக்கெட்!

அழுத டாம் மூடி :
ரிஷப் பண்ட் அடித்ததை பார்த்து ஐதராபாத் அணி தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி தேம்பி தேம்பி அழுதார்.


மறுபக்கம் டெல்லி அணியுடனான தோல்வியால் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் கண்ணீர் வடித்தார்.


அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 19வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அவர் 21 பந்துகளில் 49 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்