ஆப்நகரம்

GT vs LSG: ‘டாஸ் வென்றது குஜராத் அணி’...மொத்தம் 4 மாற்றங்கள்: ரவி பிஷ்னோய் நீக்கம்..XI அணி இதுதான்!

லக்னோவுக்கு எதிரான போட்டியில் குஜராத் டாஸ் வென்றுள்ளது.

Samayam Tamil 10 May 2022, 8:07 pm
ஐபிஎல் 15ஆவது சீசன் 57ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil குஜராத் டைடன்ஸ், லக்னோ அணி


டாஸ் வென்றப் பிறகு பேசிய குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா, அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். லாக்கி பெர்குஷனுக்கு மாற்றாக மேத்யூ வேட், சாய் சுதர்சனுக்கு மாற்றாக சார் கிஷோர், பிரதீப் சங்வானுக்கு மாற்றாக யாஷ் தயாள் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடுத்து லக்னோ அணியில் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக கரண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ அணி: குவின்டன் டி காக், கேஎல்.ராகுல், தீபக் ஹூடா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கரண் ஷர்மா, க்ருனால் பாண்டியா, ஆயூஷ் படோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த் சமீரா, ஆவேஷ் கான், மோக்சின் கான்.

குஜராத் அணி: ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ஹார்திக் பாண்டியா, சாய் கிஷோர், டேவிட் மில்லர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்