ஆப்நகரம்

RR vs DC: ‘டாஸ் வென்றது டெல்லி’...அணியில் மொத்தம் 3 மாற்றங்கள்: இதன்னை ரன்தான் டார்கெட்: ரிஷப் பேட்டி!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றுள்ளது.

Samayam Tamil 11 May 2022, 7:08 pm
ஐபிஎல் 15ஆவது சீசன் 58ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன்


டாஸ் வென்றப் பிறகு பேசிய ரிஷப் பந்த், அணியில் ரிபல் படேல், கலீல் அகமது ஆகியோருக்கு பதில் லலித் யாதவ், சேத்தன் சகார்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் எனக் கூறினார். ராஜஸ்தான் அணியில் ஷிம்ரோன் ஹெட்மையருக்கு பதிலாக வன் டீர் துஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ரியான் பராக், வன் டீர் துஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரன்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஜ்வேந்திர சஹல், குல்தீப் சன்.

டெல்லி அணி: டேவிட் வார்னர், ஸ்ரீகர் பரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், ரௌமேன் பௌல், அக்சர் படேல், லலித் யாதவ், ஷர்தூல் தாகூர், குல்தீப் யாதவ், சேத்தன் சகார்யா, அன்ரீக் நோர்க்கியா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்