ஆப்நகரம்

LSG vs GT: ‘ரஷித் கானயே’...நடுங்க வைத்த தீபக் ஹூடா: பந்துபோட கை வரல..வேற லெவல் செய்கை!

தீபக் ஹூடா திடீரென்று அதிரடி அவதாரம் எடுத்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

Samayam Tamil 28 Mar 2022, 9:26 pm
ஐபிஎல் 15ஆவது சீசனின் 4ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil தீபக் ஹூடா, ஆயூஷ் பதானி


லக்னோ இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு, முதல் பந்து முதலே பலத்த அடி விழ ஆரம்பித்தது. ஆம், ஓபனிங் பௌலர் முகமது ஷமி ஆட்டத்தின் முதல் பந்திலேயே கே.எல்.ராகுலை கோல்டன் டக் ஆக்கி மிரட்டினார். இதனைத் தொடர்ந்தும் ஷமி பந்துகளை அபாரமாக ஸ்விங் செய்ய ஆரம்பித்தார். குறிப்பாக வலது, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பான முறையில் இன் ஸ்விங் வீசியது, பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது.

முதல் ஓவரில் ராகுலையும், 3ஆவது ஓவரில் குவின்டன் டி காக்கையும் 7 (9), 5ஆவது ஓவரில் மனிஷ் பாண்டேவையும் 6 (5) வீழ்த்தினார். இதில் ராகுல் மட்டுமே, கீப்பரிடம் கேட்ச் ஆனார். மற்ற இவரும் கிளின் போல்ட் தான். இதற்கிடையே ஆரோன் பிஞ்சும் எவின் லிவிஸ் 10 (9) விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதனால், லக்னோ அணி பவர் பிளே முடிவில் 32/4 என திணறியது.

அபார பார்ட்னர்ஷிப்:

இதனைத் தொடர்ந்து தீபக் ஹூடா, ஆயூஷ் பதானி ஆகியோர் பெரிய பார்டனர்ஷிப் அமைத்தார்கள். ஹார்திக் பாண்டியா, ரஷித் கான் என அனைவரின் பந்துகளையும் இருவரும் அசால்ட்டாக பவுண்டரிக்கு விரட்டியதால், லக்னோ அணியில் ஸ்கோர் கிடுகிடுவென உயரத்துவங்கியது. குறிப்பாக ரஷித் கான் வீசிய 13.1ஆவது ஓவரில், தீபக் ஹூடா எவ்வித நெருக்கடியில்லாமல் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனை வாயில் விரலை வைத்து பார்த்த ரஷித் கான், அதன்பிறகு சரியான லைனில் பந்துவீசவில்லை. சில பந்துகளை ஷார்ட் பால்களாக வீசி, சிங்கில்கள் மட்டும் செல்வதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹார்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் ஆயூஷ் பதானி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க, தீபக் ஹூடாவும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி அடித்தார். இதனால், ஸ்கோர் சிறப்பாக முறையில் உயர்ந்து வந்த நிலையில், 15.5வது ஓவரில் ரஷித் கான் பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக LBW ஆனார்.

அடுத்து ஹூடா விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்த ஆயூஷ் பதாடி 41 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். க்ருனால் பாண்டியாவும் 21 (13) தனது பங்கிற்கு ரன்கள் அடித்ததால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 158/6 ரன்கள் சேர்த்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்