ஆப்நகரம்

RR vs DC: 'முதல் 6 பந்துலேயே'...மெகா சாதனை படைத்த ராஜஸ்தான்: என்னா அடி...199/4 ரன்கள் குவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஓவரிலேயே மெகா சாதனை படைத்து அசத்தியது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 8 Apr 2023, 5:35 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் 11ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக துவக்க ஓவரை கலீல் அகமது வீச வந்தார். இவரை எதிர்கொண்ட ஜெய்ஷ்வால் 6 பந்துகளில் 5 பவுண்டரி விளாசி 20 ரன்களை குவித்தார். இதன்மூலம், ஐபிஎல் 16ஆவது சீசனில், துவக்க ஓவரில் அதிக ரன்களை ராஜஸ்தான் குவித்தது.

இதனைத் தொடர்ந்து ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில், ஜெய்ஷ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 60 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சஞ்சு சாம்சன் 0 (4), ரியான் பராக் 7 (11) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் சொதப்பினார்கள். இந்நிலையில், பட்லர் மற்றும் ஹெட்மையர் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 199/4 ரன்களை சேர்த்து அசத்தியது.

ஜாஸ் பட்லர் 51 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 79 ரன்களையும், ஹெட்மையர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்களையும் குவித்து கடைசி ஓவர்வரை விளையாடினார்கள்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்