ஆப்நகரம்

LSG vs GT: 'சம்பவம் செய்த குஜராத்'...4 பந்தில் 4 விக்கெட்: கடைசி நேரத்தில் செம்ம ட்விஸ்ட்..த்ரில் வெற்றி!

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி போராடி வென்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 22 Apr 2023, 7:35 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் 30ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
Samayam Tamil குஜராத் டைடன்ஸ்


இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

குஜராத் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய விருத்திமான் சாஹா 47 (37) நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் ஹார்திக் பாண்டியா 50 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களை எடுத்தார். மற்றவர்களில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. லக்னோ பிட்ச் தொடர்ந்து ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்ததால், யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இறுதியில், குஜராத் டைடன்ஸ் அணி 20 ஓவர்களில் 135/6 ரன்களை மட்டும்தான் சேர்த்தது. க்ருனால் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தார்கள்.

லக்னோ இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கே.எல்.ராகுல் 61 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸரை கூட அடிக்காமல் 68 ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து கைல் மேய்ர்ஸ் 24 (19), க்ருனால் பாண்டியா 23 (23) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை எடுத்தார்கள்.

பூரன் 1 (7) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில் 5 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோஹித் ஷர்மா சிறப்பாக பந்துவீசியதால் ராகுல், ஸ்டாய்னிஸ் 0 (1) அடுத்து விக்கெட்களை பறிகொடுத்த நிலையில், இறுதியில் படோனி 8 (6), ஹூடா 2 (2) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தார்கள்.

இதனால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 128/7 ரன்களை மட்டும் சேர்த்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்