ஆப்நகரம்

PBKS vs LSG: '257/5 ரன்கள் இலக்கு'.. ஒரேயொரு தவறு காரணமாக... தோற்ற பஞ்சாப்: அத செஞ்சிருந்தா வெற்றிதான்?

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி அபார வெற்றியைப்பெற்றது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 Apr 2023, 11:33 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் 38ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil லக்னோ vs பஞ்சாப்


லக்னோ இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில், மற்றொரு ஓபனர் கைல் மேய்ர்ஸ் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், ராகுல் 12 (9) ரன்களை மட்டும் சேர்த்து, ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், மறுபக்கம் மேய்ர்ஸ் அர்ஷ்தீப், குர்னோர் பார், சிக்கந்தர் ராசா ஆகியோரது ஓவர்களில் தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் ரபாடாவை அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர், பவுண்டர்களை பறக்கவிட்டு, 20 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.

இந்நிலையில், அதே ஓவரில் 5.5 பந்தில் மேய்ர்ஸ் 54 (24) ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். இறுதியில் லக்னோ அணி 6 ஓவர்கள் முடிவில் 74/2 ரன்களை குவித்து அசத்தியது.

அதிரடி சரவெடி:

இதனைத் தொடர்ந்து கைல் மேய்ர்ஸுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆயுஷ் படேனி 43 (24), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 72 (40), நிகோலஸ் பூரன் 45 (19) ஆகியோர் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால், லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 257/5 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தது.

பஞ்சாப் இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதர்வா டைட் 66 (36), சிக்கந்தர் ராசா 36 (22), லிவிங்ஸ்டன் 23 (14), ஜிதேஷ் ஷர்மா 24 (10) ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தனர். யாரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 201/10 ரன்களை மட்டும் சேர்த்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்