ஆப்நகரம்

MI vs GT: 'டாஸ் வென்றது குஜராத்'...பிளே ஆப் சுற்றை உறுதி செய்யுமா? பிட்ச் ரிப்போர்ட்...லெவன் அணி இதுதான்!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 12 May 2023, 7:10 pm
ஐபிஎல் 2023 சீசன் 57ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. மும்பையில் துவங்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil ஹார்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா


குஜராத் டைடன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

மும்பை வான்கடே மைதானத்தில் முதல் 4 ஓவர்கள் வரை ஸ்விங் இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஸ்பின்னர்களால் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த பிட்சில் எத்தனை ரன்கள் அடித்தாலும் சேஸ் செய்ய முடியும் எனக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டன், பியூஸ் சாவ்லா,ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெக்ரன்டூர்ப்.

குஜராத் அணி: விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தேவத்தியா, ரஷித் கான், மோஹித் ஷர்மா, நூர் முகமது, முகமது ஷமி.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்