ஆப்நகரம்

CSK vs GT Final: 'ஆட்ட நாயகன் விருது இவருக்குதான்'...ஜடேஜாவுக்கு கிடையாது? வென்றது இவர்தான்!

ஆட்ட நாயகன் விருதினை இந்த சிஎஸ்கே வீரர்தான் வென்றார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 30 May 2023, 2:38 am
ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருந்ததுகுகு
Samayam Tamil சிஎஸ்கே


இந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

குஜராத் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் விருத்திமான் சாஹா 54 (39), ஷுப்மன் கில் 39 (20), சாய் சுதர்ஷன் 96 (47), ஹார்திக் பாண்டியா 21 (12) என களமிறங்கிய அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 214/4 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

மழை குறுக்கீடு காரணமாக சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் 26 (16), டிவோன் கான்வே 47 (25) இருவரும் அதிரடியாக விளையாடி நூர் அகமது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ரஹானேவும் 27 (13) சிறப்பாக செயல்படவில்லை.

கடைசி கட்டம்:

இறுதியில், அம்பத்தி ராயுடு காட்டடி அடித்து, 19 (8) ரன்களை எடுத்தார். தொடர்ந்து, அடுத்த பந்திலேயே தோனியை மோஹித் வெளியேற்றினார். இறுதியில் 12 பந்துளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷமி 8 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார்.

இறுதியில் 6 பந்துளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளையும் யார்க்கர்களாக வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில், ஸ்லாட் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஜடேஜா பவுண்டரி அடித்தார். இதனால், சிஎஸ்கே 15 ஓவர்களில் 171/5 ரன்களை சேர்த்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

மழை குறுக்கீடு காரணமாக சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் 26 (16), டிவோன் கான்வே 47 (25) இருவரும் அதிரடியாக விளையாடி நூர் அகமது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ரஹானேவும் 27 (13) சிறப்பாக செயல்படவில்லை.

கடைசி கட்டம்:

இறுதியில், அம்பத்தி ராயுடு காட்டடி அடித்து, 19 (8) ரன்களை எடுத்தார். தொடர்ந்து, அடுத்த பந்திலேயே தோனியை மோஹித் வெளியேற்றினார். இறுதியில் 12 பந்துளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷமி 8 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். இறுதியில் 6 பந்துளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளையும் யார்க்கர்களாக வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில், ஸ்லாட் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஜடேஜா பவுண்டரி அடித்தார். இதனால், சிஎஸ்கே 15 ஓவர்களில் 171/5 ரன்களை சேர்த்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

கான்வே பேட்டி:

இப்போட்டியில் 47 (25) ரன்களை குவித்த டிவோன் கான்வேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு பேசிய கான்வே, ''இந்த தருணத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தேன். ருதுராஜும் நானும் சிறப்பாக செயல்பட்டோம். தனிப்பட்ட முறையில், எனக்கு இது மறக்க முடியாத போட்டி. இதைவிட பெரிய ஐபிஎல் பைனல் இருக்க முடியாது'' எனக் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்