ஆப்நகரம்

CSK vs GT Final: 'மழை குறுக்கீடு'...ரிசர்வ் டே இருக்கிறதா? இத்தனை ஓவர்கள் வரை மட்டுமே போட்டியை நடத்த முடியும்!

அகமதாபாத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 May 2023, 8:06 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.
Samayam Tamil ஹார்திக் பாண்டியா, மகேந்திரசிங் தோனி


இந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கிட்டதட்ட சம பலமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில், மழை காரணமாக டாஸ் போடும் நிகழ்ந்து தாமதமாகியுள்ளது. இன்று போட்டி நடைபெறவில்லை என்றால், நாளை ரிசர்வ் டே அன்று போட்டி நடத்தப்படும். இன்று இரவு 12 மணி வரை நேரம் இருக்கிறது. குறைந்தபட்சம் 5 ஓவர்கள் போட்டியாக கூட இன்று நடத்தப்படலாம். 12 மணிக்கு மேலும் மழை பெய்யும் பட்சத்தில், ஆட்டம் நாளைதான் நடத்தப்படும்.

9:35 மணி வரை ஓவர்கள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. 9:35 மணிக்கு பிறகுதான், ஓவர்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டு வரும்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்