ஆப்நகரம்

CSK vs GT: 'இது சரிபட்டு வராது'...கடைசி நேரத்தில் தோனி எடுத்த அதிரடி முடிவு: வெற்றிக்கு செம்ம ஸ்கெட்ச்!

கடைசி நேரத்தில் தோனி அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 28 May 2023, 2:12 pm
ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.
Samayam Tamil சென்னை சூப்பர் கிங்ஸ்


இந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கிட்டதட்ட சம பலமாகத்தான் இருக்கிறது.

தோனிக்கு 11ஆவது:

மகேந்திரசிங் தோனி, சிஎஸ்கேவை 10ஆவது முறையாக பைனலுக்கு கூட்டிச்செல்ல உள்ளார். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 11ஆவது முறையாகும். புனே அணிக்காக ஒருமுறை பைனலில் விளையாடியிருக்கிறார்.

ஹார்த்திக்கிற்கு 5ஆவது முறை:

அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹார்திக் பாண்டியா 4 முறை பைனலில் விளையாடியிருக்கிறார். கடந்த வருடம் குஜராத் டைடன்ஸ் அணியை பைனலுக்கு கூட்டிசென்று கோப்பையை வென்றுகொடுத்தார். இப்படி மொத்தம் 5 முறை பைனலில் விளையாடி, 5 முறையும் கோப்பை வென்ற அணியில் ஹார்திக் இருந்திருக்கிறார். இதன்மூலம், பைனலில் ஹார்திக் இருந்தாலே, அந்த அணிக்குத்தான் வெற்றி என புள்ளி விபரம் கூறுகிறது.

சிஎஸ்கேவுக்கு பிரச்சினை:

அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அகமதாபாத் மைதானம் சிஎஸ்கேவுக்கு மோசமான மைதானமாக இருக்கிறது. மறுபக்கம் குஜராத் அணியை பொறுத்தவரை இங்கு 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று, ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

இதனால், இன்று சிஎஸ்கே வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.

தோனியின் திட்டம்:

ஆகையால், பைனலுக்காக சிஎஸ்கே கேப்டன் தோனி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மொயின் அலிக்கு மாற்றாக மிட்செல் சாண்ட்னரை கொண்டுவரை தோனி முடிவு செய்துள்ளாராம். மிட்செல் சாண்ட்னர் கடைசியாக, குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியபோது, 4 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதனால், பைனலில் சாண்ட்னை கொண்டு வந்தால், நிச்சயம் வெற்றிக்கு தேவையான விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்