ஆப்நகரம்

IPL 2023: ‘சிஎஸ்கேவுக்காக’…தோனி டார்கெட் செய்திருக்கும் 3 வீரர்கள்: அந்த ‘அங்கில்’ வீரருக்கும் ஸ்கெட்ச்!

சிஎஸ்கேவுக்காக மூன்று வீரர்களை தோனி தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 18 Dec 2022, 6:42 am
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.
Samayam Tamil சென்னை சூப்பர் கிங்ஸ்


ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

எந்தெந்த அணிகள் யார் யாரை கழற்றிவிட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள: ( ஐபிஎல் 2023: அனைத்து அணிகளும்...யார் யாரை கழற்றிவிட்டுள்ளது? முழு விபரம் இதோ! )

சிஎஸ்கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே தக்கவைப்பு:

எம்எஸ் தோனி (கேப்டன்), டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, தீபக் சௌத்ரினா, சிமிர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா ஆகியோரை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது.

3 வீரர்களுக்கு குறி:

இந்நிலையில், சிஎஸ்கேவுக்காக தோனி மூன்று வீரர்களை தேர்வு செய்து, நிர்வாகத்திடம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1.சாம் கரன்:

2022ஆம் ஆண்டில் 36 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாம் கரன், 7.86 எகனாமி, 134 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 495 ரன்களையும், 46 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். தற்போது முரட்டு பார்மில் இருக்கும் வரை வாங்க, திட்டங்களை தீட்ட வேண்டும் என தோனி, நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2.ரிலே ரூசோவ்:


தென்னாபிரிக்க அணியின், அதிரடி ஆட்டக் காரர் ரிலே ரூசோவ், 2022ஆம் ஆண்டில் 42 டி20 போட்டிகளில் 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1340 ரன்களை குவித்துள்ளார். அதில், 2 சதங்களும் அடங்கும். இவருக்கு நிச்சயம் கடும் போட்டி இருக்கும்.

3.மனிஷ் பாண்டே:

கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய மனிஷ் பாண்டே, இதுவரை மொத்தம் 129 ஐபிஎல் போட்டிகளில் 130 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3678 ரன்களை குவித்திருக்கிறார். சேப்பாக் போன்ற ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானத்தில், நிதானமாக, நிலைத்து நின்று விளையாடும் வீரரும் தேவை. இதனால், ராபின் உத்தாப்பாவுக்கு மாற்றாக 33 வயதாகும் மனிஷ் பாண்டேவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்