ஆப்நகரம்

GT vs MI: 'மழை நின்றால்'...நள்ளிரவு 12:50 மணிக்கு கூட போட்டியை ஆரம்பிக்கலாம்: விதிமுறைகள் என்ன? முழு விபரம்!

குஜராத், மும்பை இடையிலான போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 26 May 2023, 7:27 pm
ஐபிஎல் 16ஆவது சீசன் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிந்து, பிளே ஆப் சுற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil ஐபிஎல் 2023


இதில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி சொதப்பி, தோற்று வெளியேறியுள்ளது. இன்று குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடும். இதனால், இன்றைய போட்டி மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மழை:

தற்போது, போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் ரத்தாகும் சூழல் இருக்கிறது. அப்படி போட்டி ரத்தானால் ரிசர்வ் டே கிடையாது. ஆகையால், லீக் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால், அவ்வளவு சீக்கரமாக ஆட்டத்தை ரத்துசெய்ய முடியாது.

பிளே ஆப் போட்டியை முடிந்த வரை, நடத்தவே ஐபிஎல் நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான விதிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

1) மழை நின்று 9:40 மணிக்கு போட்டி துவங்கினாலும், ஆட்டம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாகத்தான் நடைபெறும்.

2) மழை நின்று, 11:56 மணிக்கு போட்டி துவங்கும் பட்சத்தில், ஆட்டம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும்.

3) ஒருவேளை 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்த முடியவில்லை என்றால், சூப்பர் ஓவர் முறை மூலம் பிளே ஆப் போட்டி நடைபெறும். அதுவும் நள்ளிரவு 12:50 மணிக்குள் ஆட்டம் துவங்கினால் மட்டும்தான் இது சாத்தியம். நள்ளிரவு 12:51 மணிக்கு பிறகு போட்டி துவங்க வாய்ப்பே இல்லை.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்