ஆப்நகரம்

MI vs RCB: 'ரோஹித் பேச்சை கேட்க முடியாது'.. களத்திலேயே கோபமடைந்த ஹர்திக்: விளாசும் ரசிகர்கள்!

ரோஹித் சொன்னதை கேட்காமல், ஹர்திக் அடம்பிடித்து நின்றது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 12 Apr 2024, 7:55 am
ஆர்சிபிக்கு எதிராக ஆட்டத்தில், 197 ரன்கள் இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸ் செய்தது.
Samayam Tamil ipl 2024 mi vs rcb hardik pandya not listen rohit sharmas advice
MI vs RCB: 'ரோஹித் பேச்சை கேட்க முடியாது'.. களத்திலேயே கோபமடைந்த ஹர்திக்: விளாசும் ரசிகர்கள்!


ஆர்சிபி vs மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

வெற்றி முக்கியம்:

இப்போட்டியில், இரண்டு அணிகளுக்கும் வெற்றி, மிகமுக்கியமாக தேவைப்படுகிறது. மும்பை 4 போட்டிகளில் ஒரு வெற்றியும், ஆர்சிபி 5 போட்டிகளில் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. ஆகையால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடியாக வேண்டும்.

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டிக்கான பிட்ச், முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டால், சிக்ஸர் மழை இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆர்சிபிக்கு எதிராக மும்பை அணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.

அடுத்தடுத்து விக்கெட்:

சரியான பார்மில் இருக்கும் விராட் கோலி, இப்போட்டியில் 3 (9) ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ந்து, மேக்ஸ்வெலும் 0 (4) டக்அவுட் ஆனதால், ஆர்சிபி அணி, பெரிய ஸ்கோர் அடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

டூ பிளஸி, படிதர் அபாரம்:

முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் டூ பிளஸி, ராஜத் படிதர் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, அரை சதம் அடித்தனர். படிதர் 26 பந்துகளில் 50 அடித்து, நடையைக் கட்டினார்.

தினேஷ் கார்த்திக் அதிரடி:

படிதர் ஆட்டமிழந்த நிலையில், டூ பிளஸியும் 61 (40) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் பும்ரா வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், லாம்ரோர் 0 (1), சௌரப் சௌகான் 9 (8), விஜயகுமார் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து அதிரடி காட்டினார்.

ரன் குவிப்பு:

ஆர்சிபி அணி 17 ஓவர்கள் முடிவில் 154/6 ரன்களை மட்டும் அடித்திருந்த நிலையில், அடுத்து தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். குறிப்பாக, ஆகாஷ் மத்வாலின் கடைசி ஓவரில், இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை குவித்தார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 196/8 ரன்களை எடுத்தது.

மும்பை எளிய வெற்றி:

இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓபனர்கள் இஷான் கிஷன் 69 (34), ரோஹித் சர்மா 38 (24) ஆகியோர் அதிரடி காட்ட, இறுதிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 52 (19), ஹர்திக் 21 (6), திலக் வர்மா 16 (10) ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இதனால், மும்பை அணி 15.3 ஓவர்களில் 199/3 ரன்களை குவித்து, அபார வெற்றியைப் பெற்றது.

ரோஹித் சொன்னபோது:

ஆகாஷ் மத்வால் பந்துவீசும்போது, தினேஷ் கார்த்திக்கிற்கு கீப்பருக்கு பின், தேர்ட் மேன் திசையில் ஒரு பீல்டர் தேவை என ரோஹித் சர்மா கூறினார். ஆனால், அதனை ஹர்திக் கேட்கவில்லை. கார்த்திக்கும் அந்த திசையில் ஒரு பவுண்டரியை அடித்தார். அதன்பிறகும், ரோஹித் அறிவுறுத்தவே அதனை ஹர்திக் கேட்கவில்லை. மீண்டும் அதே திசையில் பவுண்டரி அடித்தார். இப்படியாக அதே திசையில் மூன்று பவுண்டரிகள் பறந்தன. ரோஹித் சொன்னபோது, ஹர்திக் முகம்கொடுத்து கூட கேட்கவில்லை. ரோஹித் சொன்னார் என்பதற்காகவே, அந்த திசையில் பீல்டர்களை வைக்கவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்