ஆப்நகரம்

நாங்க ரெடியா இருக்கோம்... சொன்ன அடுத்த நிமிஷம் ஐபிஎல் ஆரம்பம்!

மும்பை: உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி அறிவித்த உடன் ஐபிஎல் தொடர் வேலையை துவங்க தயாராக உள்ளதாக ஐபிஎல் சார்மன் பிரிஜேஸ் படேல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jun 2020, 5:57 pm
உலகக் கோப்பை டி20 போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஐசிசி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறாத பட்சத்தில் ஆண்டு இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் மட்டுமே போட்டிகளை நடத்த முடியும். இதனால், ஐபிஎல் நிர்வாகத்திற்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil IPL


ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ள உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது தொடர்பாக வரும் புதன் கிழமை ஐசிசி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை ஐபிஎல் சார்மன் பிரிஜேஸ் படேல் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து படேல் கூறுகையில், “ஐபிஎல் தொடரை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் டி-20 உலகக்கோப்பை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியான பின் தான் அட்டவணை தயாரிக்க முடியும். டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த தகவல் எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. செப்டம்பர்- அக்டோபரில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்