ஆப்நகரம்

காவிாி விவகாரம்: சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டிகள் மாற்றம்

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Apr 2018, 4:57 pm
காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Chennai: Chennai Super Kings (CSK) skipper MS Dhoni with teammates during the p...
Chennai Super Kings (CSK) skipper MS Dhoni with teammates during the practice session of IPL T20-2018 tournament at MAC Stadium in Chennai on Friday.Photo


காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படக் கூடாது போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டக் காரா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.

ஆனால் போராட்டக்காரா்களின் கருத்தை மீறி நேற்றைய (செவ்வாய் கிழமை) போட்டி சென்னையில் நடைபெற்றது. போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பே போராட்டக்காரா்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா். சில இடங்களில் போராட்டக்காரா்கள் ஐ.பி.எல். ரசிகா்களையும், சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ஜொ்சியை அணிந்த ரசிகா்களையும் தாக்கிய காட்சிகள் இணையங்களில் வெளியாகின.

மேலும் போட்டி நடைபெறும் போது வீரா்கள் மீது காலணிகள் வீசப்பட்டன. இந்த விவகாரம் பூதாகரம் எடுத்த நிலையில், இது தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில் இனியும் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் எங்கள் போராட்டங்கள் வேறு விதமாக அமையும் என்று போராட்டக்காரா்கள் எச்சரித்தனா்.

இதன் அடிப்படையில் இனி வரும் ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் அண்மை மாநிலங்களுக்கு மாற்றப்படலாம் என்றும், இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகலாம் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி சென்னையில் 20ம் தேதி நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என்று நிா்வாகம் தரப்பில் தொிவிக்கப்பட்டது. ஆனால் தொடா் போராட்டம் காரணமாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகல் டிக்கெட் விற்பனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்