ஆப்நகரம்

IPL 2022: லக்னோ அணியை வாங்கியவர்…தோனியை நீக்கி ஷாக் கொடுத்தவர்: வெளியானது பரபரப்பு தகவல்!

லக்னோ அணியை வாங்கியவர் ஏற்கனவே ஐபிஎல் அணிக்கு ஓனராக இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2021, 1:52 pm
ஐபிஎல் 14ஆவது சீசன் நிறைவடைந்த பிறகு, அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் ஐபிஎலில் பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி, புதிய இரண்டு அணிகளுக்கான ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
Samayam Tamil ஐபிஎல் 2022


இரண்டு நிறுவனங்கள்:


இறுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை மையமாக கொண்ட அணியை சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் 5,625 கோடிக்கும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாக கொண்ட அணியை ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் 7090 கோடிக்கும் வாங்கியுள்ளது.

ஏற்கனவே ஓனர்:


இதில் லக்னோ அணியை வாங்கியுள்ள சஞ்சீவ் கோயங்கா, இதற்குமுன்பு மகேந்திரசிங் தோனி தலைமையிலான புனே அணியை 2016-17 ஆகிய ஆண்டுகளில் வாங்கியிருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு புனே அணி 7ஆவது இடத்தைப் பிடித்து சொதப்பியது. இதனால், 2017 ஐபிஎல் சீசனில் மகேந்திரசிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். புனே அணியும் இறுதிப் போட்டிவரை முன்னேறி அசத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு:


ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவுக்கு சுமார் 47,405 கோடி சொத்து இருக்கிறது. ஏற்கனவே கால்பந்து அணி மற்றும் டேபிள் டென்னிஸ் அணிகளை இவரது நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படி விளையாட்டுத் துறையில் அனுபவம் அதிகம் இருப்பதால், லக்னோ அணிக்கு சிறந்த வீரர்களை வாங்கி, பலமிக்க அணியாக திகழ வைப்பார் எனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்