ஆப்நகரம்

ஒரே போட்டியில் பவுண்டரிகளாக விளாசி சாதனை படைத்த சென்னை!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய 17வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 25 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 12:14 am
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய 17வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 25 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil summa


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. இதையடுத்து இன்று நடக்கும் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் மற்றும் ரெய்னா அதிரடி காட்ட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதில், வாட்சன் 106 ரன்களும் (57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரிகள் உள்பட), ரெய்னா 46 ரன்களும் (29 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட) எடுத்தனர். இந்த ஒரே போட்டியில் சென்னை அணி ஒட்டுமொத்தமாக 25 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2012ல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 24 பவுண்டரிகளும், 2008ல் மும்பைக்கு எதிராக 24 பவுண்டரிகளும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most fours hit in an innings by CSK:

25 vs RR, Pune, 2018 *

24 vs DD, Chennai, 2012

24 vs MI, Chennai, 2008

23 vs MI, Bengaluru, 2012

22 vs KXIP, Dharamsala, 2010

அடுத்த செய்தி

டிரெண்டிங்