ஆப்நகரம்

மூன்றாவது முறையாக அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பிராவோ - இறுதிப் போட்டியில் சொதப்பல்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து வருகின்றது.

Samayam Tamil 27 May 2018, 8:43 pm
மும்பை : ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து வருகின்றது.
Samayam Tamil Dwayne-Bravo


ஆல்ரவுண்டர் பிராவோ:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ ஐபிஎல் போட்டியில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டாக திகழ்கின்றார்.

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி நேர ஓவரைப் போட விருப்பமாக தேர்ந்தெடுப்பது பிராவோவைத் தான். அவரின் துல்லியமான பவுலிங் மற்ற பவுலர்களை விட குறைவாக ரன் கொடுப்பார் என்ற நம்பிக்கை தான் அதற்கு காரணம். பிராவோவும் அதற்கேற்றார் போல் பவுலிங் செய்து வருகிறார்.
இருப்பினும் கடைசி நேரங்களில் பவுலிங் செய்யும் போது எப்படி சிறப்பாக பந்துவீசினாலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பது வழக்கம். அதனால் இந்த சீசனில் மிக அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராவோ செய்துள்ளார். பிராவோ ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது இது மூன்றாவது முறையாகும்.

அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள் விபரம்;

  • 509 ரன்கள் - டுவைன் பிராவோ (2018)
  • 508 ரன்கள் - உமேஷ் யாதவ் (2013)
  • 507 ரன்கள் - மெக்கிலனகன் (2017)
  • 497 ரன்கள் - டுவைன் பிராவோ (2013)
  • 504 ரன்கள் - சித்தார்த் கவுல் (2018)
  • 497 ரன்கள் - டுவைன் பிராவோ (2013)
  • 494 ரன்கள் - டுவைன் பிராவோ (2016)

அடுத்த செய்தி

டிரெண்டிங்