ஆப்நகரம்

CSK: 'தோனியின் இந்த சாதனையை'...யாராலும் தகர்க்க முடியாது: ஏன் தெரியுமா? முரட்டு ரெக்கார்ட்!

ஐபிஎல் தொடரில் தோனியின் இந்த சாதனையை யாராலும் தகர்க்க முடியாது எனக் கருதப்படுகிறது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 14 Apr 2023, 6:01 pm
ஐபிஎல் 16ஆவது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலின் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக களமிறங்கியது. அப்போட்டியில் மகேந்திரசிங் தோனி கேப்டனாக செயல்பட்டதன் மூலம், சிஎஸ்கேவுக்காக 200 போட்டிகளில் கேப்டன்ஸி செய்யவர் என்ற மெகா சாதனையை படைத்தார். இதுவரை 14 சீசன்களில் தோனி, சிஎஸ்கேவுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது 4 முறை ஐபிஎல் கோப்பையையும், ஒருமுறை சாம்பியன்ஷ் டிராபி கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, சிஎஸ்கேவை 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட்டி சென்று அசத்தியிருக்கிறார். ஐபிஎலில் சிஎஸ்கேவின் சாதன்களைக்கு தோனியின் கேப்டன்ஸிதான் மிகமுக்கிய காரணம்.

தோனியின் சாதனை:

இந்நிலையில், தோனி 200 போட்டிகளில் ஒரே கேப்டனாக செயல்பட்டதுபோல், வேறு எந்த வீரரும் சாதனை படைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. ஏனென்றால், ஒரு வீரர் 200 போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், குறைந்தது 14 சீசன்களில் விளையாடியாக வேண்டும்.

தகர்க்க வாய்ப்பில்லை, ஏன் தெரியுமா?

அதுமட்டுமல்ல சராசரியாக 25 வயதில் ஒரு வீரர் கேப்டனாக பொறுப்பேற்றாலும் கூட, 14 சீசன்களில் அந்த அணியை வழிநடத்தியாக வேண்டும். அது முடியவே முடியாத காரியம். 25 வயது முதல் 39 வயது வரை பிட்னஸுடன் அந்த வீரர் தொடர்ச்சியாக விளையாடுவதே சந்தேகம்தான். அதுவும் கேப்டனாக என்றால், அது முடியவே முடியாத காரியம்.

ஐபிஎலில் தோனியை தவிர்த்து 2008 முதல் தொடர்ச்சியாக கேப்டன்ஸி செய்து வந்தவர் விராட் கோலி. இவரும் 2021ஆம் ஆண்டிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆகையால், இனி வரும் இளம் வீரரால் இந்த சாதனையை படைக்க முடியும். அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நிஜம்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்