ஆப்நகரம்

MS Dhoni: தோனியை 3 போட்டிகளுக்கு தடை செய்ய வேண்டும் - திடீரென எதிராக மாறிய சேவாக்

தல தோனியை சிறந்த வீரராக இருந்தாலும், அவர் செய்த தவறுக்கு 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Apr 2019, 9:09 pm
தல தோனியை சிறந்த வீரராக இருந்தாலும், அவர் செய்த தவறுக்கு 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sehwag Dhoni


இந்திய அணியில் விளையாடி வரும் தோனியும், முன்னாள் வீரர் சேவாக்கும் ரசிகர்கள் மத்தில் நன்மதிப்பை பெற்றவர்கள். ஆனால் தற்போது தோனி செய்தது தவறு அவருக்கு 2-3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தோனி பாணியில் விக்கெட்டை காப்பாற்றிக் கொண்ட ரோகித் சர்மா

ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஏப்ரல் 11ம் தேதி நடந்த போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் சாண்ட்னர் சிக்ஸர் அடிக்க வெற்றி பெற்றது.

KXIP v RR: அல்ஜார்ரியை அலறவிட்ட பட்லர்... ஒரு ஓவரில் 28 ரன்களை குவித்து அசத்தல்

தடை செய்ய வேண்டும்:
இந்த போட்டியில் கூல் கேப்டன் என போற்றப்படும் தோனி, போட்டி நடுவர்களின் முடிவால் களத்திற்கே சென்று நடுவரின் தவறை சுட்டிக் காட்டினார். இது போட்டி விதிமுறைப்படி தவறு என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த போட்டியின் முடிவில் தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது

IPL 2019 Live RCB vs KXIP: கெய்ல் சூறாவளியில் 6 ஓவரில் 60 எடுத்த பஞ்சாப்... பெங்களூரு கதறல்

இதுகுறித்து சேவாக் கூறும் போது, “தோனி இந்திய அணிக்காக நிறைய செய்திருக்கிறார். அதை நினைத்து பெருமை படுகிறேன். தோனியின் பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் மைதானத்தின் உள்ளே சென்று நடுவரிடம் வாதிட்டது தவறு. இது போன்ற செயலுக்கு தோனியே முன் உதாரணம் ஆகிவிடக் கூடாது. அதனால் அவருக்கு 2 அல்லது 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும். கிரிக்கெட் விதிமுறை 2.20 படி தவறு என கூறுகிறது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்