ஆப்நகரம்

முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி

பெங்களூர்யை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2018, 12:17 am
பெங்களூர்யை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Samayam Tamil ipl rohit


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தொடங்கினர். பெங்களூர் அணியினர் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் அந்த அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டதாகிவிட்டது

பெங்களூர் அணியில் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 92 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 46 ரனகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்