ஆப்நகரம்

Breaking: 'கொல்கத்தா அணிக்கு'...புது கேப்டன் நிதிஷ் ராணா: தொடர் தோல்வியால்..சீனியர் புறக்கணிப்பு!

கொல்கத்தா அணிக்கு புதுக் கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 27 Mar 2023, 6:11 pm
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், காயம் காரணமாக 16ஆவது சீசனில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil நிதிஷ் ராணா


இதனைத் தொடர்ந்து புதுக் கேப்டனை தேர்வுசெய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இறுதியில் இரண்டு பேரை தேர்வுசெய்து வைத்திருந்தனர். அதில் முதல் நபர் சுனில் நரைன். இரண்டாவது நபர் உள்ளூர் இளம் வீரர் நிதிஷ் ராணா.

நரைன் புறக்கணிப்பு:

இந்நிலையில், புதுக் கேப்டனை தேர்வுசெய்ய கொல்கத்தா அணி நிர்வாகிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, இருவரின் கேப்டன்ஸி ரெக்கார்ட் குறித்து ஆலோசித்து, இறுதியில் நிதிஷ் ராணாவை கேப்டனாக தேர்வுசெய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நரைன் கேப்டன்ஸி ரெக்கார்ட்:

சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற டி20 லீக் தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை சுனில் நரைன்தான் வழிநடத்தினார். இவர் 2012ஆம் ஆண்டுமுதல், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருப்பதால்தான், இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், நரைன் தலைமையில் கொல்கத்தா அணி ஒரு வெற்றியை மட்டும் பெற்று, 8 தோல்விகளை சந்தித்தது. இதனால்தான், சீனியரான நரைனை அணி நிர்வாகம் கேப்டனாக தேர்வுசெய்யவில்லை.

நிதிஷ் ராணா கேப்டன்ஸி ரெக்கார்ட்:

மறுபக்கம், 29 வயதாகும் நிதிஷ் ராணா, சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் டெல்லி அணியை வழிநடத்தி 8 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் பெற்றுக்கொடுத்தார். இதனால்தான், இவரை தேர்வுசெய்திருப்பதாக கருதப்படுகிறது.

நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி 2018ஆம் ஆண்டு வாங்கி, தற்போதுவரை அணியில் தக்கவைத்து வருகிறது. இதுவரை 74 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், 135.61 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1744 ரன்களை குவித்திருக்கிறார். கடந்த சீசனில் ஷ்ரேயஸ் ஐயருக்கு அடுத்து, கொல்கத்தா அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக ராணா திகழ்ந்தார். கடந்த சீசனில் 143.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 361 ரன்களை விளாசியிருந்தார்.

கேப்டன் பதவி மட்டுமல்ல, அணியின் பயிற்சியாளர் பதவிக்கும் புதியவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசன் வரை பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில், அவர் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்பட சென்றுவிட்டதால், இம்முறை சந்திகாந்த் பண்டிட் தலைமை பயிற்சியாளராக வழிநடத்த உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் செயல்பட உள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்