ஆப்நகரம்

‘கவுண்டி கிரிக்கெட்டில்’…ஹாட்ரிக் சதம் அடித்த சிஎஸ்கே எக்ஸ்-வீரர்: மீண்டும் அணிக்கு திரும்புகிறார்!

கவுண்டி கிரிக்கெட்டில் சிஎஸ்கே எக்ஸ் வீரர் ஹாட்ரிக் சதம் விளாசியுள்ளார்.

Samayam Tamil 2 May 2022, 10:53 am
இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டிவிஷன் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள சசக்ஸ் அணியில் இந்தியாவின் சேத்தேஸ்வர் புஜாரா இடம்பெற்றுள்ளார்.
Samayam Tamil புஜாரா


இவர் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிய ஸ்கோர் அடிக்காததால், சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்து ரஞ்சி கோப்பை தொடரிலும் சொதப்பியதால், ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. இதற்குமுன் வாங்கியிருந்த சிஎஸ்கேவும் கண்டுகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்துதான் கவுண்டியில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் போட்டியில் சதம் அடித்து, போட்டியை டிரா செய்ய முக்கிய பங்காற்றினார். இரண்டாவது போட்டியிலும் சதமடித்த நிலையில், மற்றவர்கள் சொதப்பியதால், அந்த அணி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து சசக்ஸ், டுர்ஹாம் அணிகள் மோதிய போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி துவங்கியது.

கைகொடுத்த புஜாரா:

இதில் முதலில் களமிறங்கிய டுர்ஹாம் அணி 223 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்துக் களமிறங்கிய சசக்ஸ் அணியில் ஓபனர்கள் டாம் ஹெய்ன்ஸ் (54), அலெஸ்டர் ஓர் (27) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மேசன் கிரேனும் (13) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இப்படி அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது புஜாரா, தொடர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தார்.

இரட்டை சதம்:

இவருக்கு உறுதுணையாக செயல்பட்ட டாம் கிளார்க் (50), முகமது ரிஷ்வான் (79) ஆகியோர் ஆட்டமிழந்த போதிலும், புஜாரா சிறப்பாக விளையாடி 334 பந்துகளில் 24 பவுண்டரிகள் அடித்து, 203 ரன்களை குவித்தார். இதனால், சசக்ஸ் 538/10 ரன்கள் சேர்த்தது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

வாய்ப்பு:

பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் புஜாரா அபாரமாக விளையாடி, ஹாட்ரிக் சதம் அடித்திருப்பதால் இந்திய அணியில் அவரது இடம் மீண்டும் நிரந்தமாகியுள்ளது. அடுத்த 2 வருடங்கள்வரை அவர் டெஸ்டில் அணியில் நீடிப்பார் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்