ஆப்நகரம்

அதிரடி மன்னன் சேவாக்கை மனம் நெகிழ வைத்த 93 வயது முதியவர்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான சேவாக்கை பார்க்க, 93 வயது முதியவர் ஒருவர் வெகு தொலைவில் இருந்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Samayam Tamil 19 Apr 2018, 7:58 pm
சென்னை: இந்திய அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான சேவாக்கை பார்க்க, 93 வயது முதியவர் ஒருவர் வெகு தொலைவில் இருந்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Samayam Tamil அதிரடி மன்னன் சேவாக்கை மனம் நெகிழ வைத்த 93 வயது முதியவர்!
அதிரடி மன்னன் சேவாக்கை மனம் நெகிழ வைத்த 93 வயது முதியவர்!


இந்திய அணியின் அதிரடி நாயகனாக திகழ்ந்தவர் விரேந்தர் சேவாக். சேவாக்கின் அதிரடி ஆட்டத்திற்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்றால், அவரின் பண்பிற்கும் அவரின் மனிதாபிமானத்திற்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆலோசகராக பணியாற்றி வரும் விரேந்தர் சேவாக்கைப் பார்க்க, ஓம் பிரகாஷ் என்ற 93 வயது முதியவர் பாட்டியாலாவிலிருந்து சண்டிகர் வந்துள்ளார். இதை அறிந்து நெகிழ்ச்சியடைந்த சேவாக், அந்த முதியவருடன் புகைப்படம் எடுத்து, அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சேவாக்கின் இந்த செயலுக்கு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன், கேரளாவில் உயிரிழந்த மது என்ற பழங்குடி இளைஞனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதியுதவி அளித்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

அடுத்த செய்தி

டிரெண்டிங்