ஆப்நகரம்

தோனிக்கு கிரிக்கெட் பார்ட் டைம், இதுதான் அவரோட முதல் வேலை!

சென்னை அணியின் கேப்டன் தோனி, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், தனது மகளின் கூந்தலை உலரவைக்கும் தந்தைப் பணியை செய்துவருகிறார்.

Samayam Tamil 26 Apr 2018, 4:28 pm
சென்னை அணியின் கேப்டன் தோனி, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், தனது மகளின் கூந்தலை உலரவைக்கும் தந்தைப் பணியை செய்துவருகிறார்.
Samayam Tamil தோனிக்கு கிரிக்கெட் பார்ட் டைம், இதுதான் அவரோட முதல் வேலை!
தோனிக்கு கிரிக்கெட் பார்ட் டைம், இதுதான் அவரோட முதல் வேலை!


சென்னை மற்றும்பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடா்ந்து களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவா் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரா் வாட்சன் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டே சென்றன. ஆனால், மறு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 8 சிக்சா்கள் உட்பட 82 ரன்கள் குவித்து, சென்னை அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருடன் சேர்ந்து, அதிரடி காட்டிய கேப்டன் தோனி 7 சிக்சா்கள் உட்பட 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரின் 4வது பந்தில் கேப்டன் தோனி சிக்சா் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், இறுதிவரை அவுட்டாகாமல் அதிரடி காட்டிய சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Game over, had a nice sleep now back to Daddy’s duties A post shared by M S Dhoni (@mahi7781) on Apr 26, 2018 at 2:54am PDT

வெற்றிக்குப் பின் பலரும் தோனியைப் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஆட்டம் முடிந்தது. நல்ல தூக்கத்திற்குப் பின், மீண்டும் தந்தை வேலைகளை தொடங்கிவிட்டேன்” என்று பதிவிட்டு, தனது மகள் ஷிவாவின் தலை முடியை ஹேர் டிரையரில் உலரவைக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்