ஆப்நகரம்

டெல்லியிடம் ஏன் தோற்றது ராஜஸ்தான்? செய்த மூன்று முக்கியத் தவறுகள் என்ன?

முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி 161 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தான். 162 ரன்களை எடுத்து ராஜஸ்தான் வெற்றிபெற்றுவிடும் எனக் கருதிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் பௌலர்கள் 20 ஓவர்கள் வரை சிறப்பாகப் பந்துவீசி அசத்தினர்.

Samayam Tamil 15 Oct 2020, 8:35 am
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைத் துவம்சம் செய்த அதே வேகத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி 161 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தான்.
Samayam Tamil three mistakes of rajasthan royals against delhi in ipl t20
டெல்லியிடம் ஏன் தோற்றது ராஜஸ்தான்? செய்த மூன்று முக்கியத் தவறுகள் என்ன?


162 ரன்களை எடுத்து ராஜஸ்தான் வெற்றிபெற்றுவிடும் எனக் கருதிய நிலையில், டெல்லி கேபிடல்ஸ் பௌலர்கள் 20 ஓவர்கள் வரை சிறப்பாகப் பந்துவீசி அசத்தினர். இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ், 8 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் செய்த மூன்று முக்கியத் தவறுகளைப் பற்றி தற்போது பார்ப்போம்

பென் ஸ்டோக்ஸை டெத் ஓவர்களில் களமிறக்காதது:

உலகக் கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் பெஸ்ட் பினிஷர் என்பது உலமகறிந்த விஷயம். ஆனால், ராஜஸ்தான் அணி இவரை துவக்க வீரராகக் களமிறக்கி, தங்களுக்கு தாங்களாகவே ஆப்பு வைத்துக்கொண்டது. ரோபின் உத்தப்பாவை துவக்க வீரராகக் களமிறக்கி, பென் ஸ்டோக்ஸை நடுவரிசையில் களமிறக்கினால், அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஜாஸ் பட்லர் முதல் வரிசையில், பென் ஸ்டோக்ஸ் நடு வரிசையில் நீடித்தால், சேஸிங் செய்ய பெரும் உதவிக்கரமாக இருக்கும்.

​மிடில் ஓவரில் ஆர்ச்சருக்கு ஓவர்கள் கொடுக்காதது:


ஜோப்ரா ஆர்ச்சர் பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார். ஆனால், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. டெத் ஓவரில் அவரை பயன்படுத்த அணி கேப்டன் முடிவு செய்தார். ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியபோது, மிடல் ஓவரில் ஆர்ச்சரை பயன்படுத்தியிருந்தால், ராஜஸ்தான் அணிக்கு நல்ல பலன்கள் கிடைத்து, ரன்கள் கட்டுக்குள் வந்திருக்கும்.

​டெத் ஓவர்களில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது:

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெற, கடைசி ஐந்து ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ராகுல் தேவத்தியா, ரோபன் உத்தப்பா களத்தில் இருந்தனர். பௌலர்களை எதிர்கொள்ளத் தயங்கிய அவர்கள் ரன்களை ஓடி எடுக்க ஆர்வம் காட்டினர். பெரிய ஷாட்களை ஆட முற்படாததால், ராஜஸ்தான் அணி தோல்வியை நோக்கி பயணித்தது. ரவிச்சந்திரன் அஸ்வின், காகிசோ ரபடா, ஆன்ரிக் நோர்க்கியா போன்றவர்கள் சிறப்பாக பந்துவீசி 24 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்