ஆப்நகரம்

MS Dhoni: '4 நிமிடம் நடுவர்களை'...கண்ட்ரோல் செய்த தோனி: விதிமுறைப்படி சரியா? பிராட் ஹக் விளக்கம்!

நடுவர்களை தோனி கண்ட்ரோல் செய்தது சரியா என்பது குறித்து பிராட் ஹக் பேசியுள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 26 May 2023, 6:42 am
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 15ஆவது சீசனில் படுமோசமாக சொதப்பி, 16ஆவது சீசனில் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil பிராட் ஹக், சிஎஸ்கே


லீக் சுற்றில் 14 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து குவாலிபையர் 1 ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு குஜராத் டைடன்ஸை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளது.

குஜராத்துக்கு எதிராக:

குஜராத்துக்கு எதிராக குவாலிபையர் 1 ஆட்டத்தில் 15 ஓவர்கள் முடிந்தப் பிறகு, அடுத்த ஓவரை வீசி தயாரான மதீச பதிரனாவை நடுவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். காரணம், 15ஆவது ஓவரின்போது பதிரனா பீல்டிங் செய்யவில்லை. 8 நிமிடங்கள் வரை களத்திற்கு வெளியே நின்றிருந்தார். இதனால், அடுத்த 8 நிமிடங்கள் வரை பதிரனாவால் பந்துவீச முடியாது (விதிமுறை காரணமாக) என்பதால், வேறு பௌலர் பந்துவீச வேண்டும் ன நடுவர்கள் கூறினார்கள்.

அப்போது, பதிரனா களத்திற்குள் வந்து 4 நிமிடங்கள் ஆகியிருந்தது. மீதி நான்கு நிமிடங்களை ஈடுசெய்ய நடுவர்களிடம் தோனி பேச்சுக்கொடுத்து, விதிமுறை குறித்து கேட்டறிந்தார். நேரம் சரியானதால், அதன்பிறகு பதிரனா பந்துவீச சென்றார்.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். தோனி அப்படி செய்தது விதிமுறைப்படி தவறு. ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.

பிராட் ஹக் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹக், இதுகுறித்து பேசியுள்ளார். அதில், ''தோனி நடுவர்களுடன் 4 நிமிடங்கள் விவாதத்தில் ஈடுபட்டு அவர்களை கவர்ந்ததால், பதிரனா நீண்ட இடைவெளிக்கு பிறகு பந்துவீச வருவதற்கு அவகாசம் கிடைத்தது. நடுவர்கள் இதுபோன்ற சமயங்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சம்பவத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருக்க கூடாது. இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''தோனி ஒரு சில திட்டங்களை பயன்படுத்தி தனக்கு தேவையானதை பெற்றுக்கொள்கிறார். குவாலிபையர் 1 ஆட்டத்தில் கூட பந்துவீச்சுக்கு வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார்'' எனத் தெரிவித்தார்.

இதன்மூலம், தோனி விதிமுறைப்படி நடக்கவில்லை, நடுவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்பதை பிராட் ஹக் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்