ஆப்நகரம்

உலகக்கோப்பை இல்லை என்றால் நிச்சயம் ஐபிஎல் நடக்கும்: வார்னர் நம்பிக்கை!

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கவில்லை என்றால் நிச்சயமாக ஐபிஎல் தொடர் நடக்கும் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jun 2020, 12:14 pm
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சார்மன் எடிங்ஸ் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் சுமார் 16 அணிகள் பங்கேற்கும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது சாத்தியமில்லாத செயல் என தெரிவித்த போதும், ஐசிசி இன்னும் இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நிச்சயமாக ஐபிஎல் தொடர் நடக்கும் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil David Warner


இதுகுறித்து வார்னர் கூறுகையில், “டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதேபோல ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் நிச்சயமாக பங்கேற்பார்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவது குறித்து பல்வேறு விதங்களிலும் பேச்சுக்கள் நடக்கிறது. அதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எங்களுக்கு பங்கேற்க தடையாக இருப்பது அரசாங்கத்தின் அனுமதி மற்றும் பயணம் செய்வதற்கான அனுமதியும் தான். இந்த அனுமதி கிடைத்துவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அதிக ஆர்வமாக உள்ளனர்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்