ஆப்நகரம்

IPL 2023: 'ரிஷப், ஷ்ரேயஸை தொடர்ந்து'...கடைசி நேரத்தில் விலகும் மற்றொரு இந்திய கேப்டன்: புதுக் கேப்டன் இவர்தான்!

ஷ்ரேயஸ் ஐயரை தொடர்ந்து, கடைசி நேரத்தில் மற்றொரு இந்திய கேப்டனும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 29 Mar 2023, 7:36 am
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களிலும் படுமோசமாக சொதப்பி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
Samayam Tamil ஐபிஎல் 2023


ஐபிஎலில் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ், இப்படி கடந்த இரண்டு சீசன்களிலும் சொதப்பியிருப்பதால், இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நிச்சயம் அழுத்தங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சவால்கள்:

ரோஹித்துக்கு இந்த அழுத்தம் மட்டுமல்ல. ஐபிஎல் 16ஆவது சீசன் முடிந்த உடனே, ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர், நவம்பரில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இருக்கிறது. இடையில், ஆசியக் கோப்பையும் நடைபெறும். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தடுத்து பெரும் சவால்கள் இருக்கிறது.

ரோஹித் விலகல்?

இந்நிலையில், ஐபிஎல் 16ஆவது சீசனின் பாதி போட்டிகள் முடிந்தப் பிறகு ரோஹித் ஷர்மா பங்கேற்காமல் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவார் என்றும், அப்போது ரோஹித் ஆலோசகராக செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னடைவு உறுதி?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே பும்ரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகயிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரோஹித் ஷர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய அணிக்காகத்தான் இதனை செய்கிறார் என்பதால், நிச்சயம் அவரையும், அணி நிர்வாகத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஐபிஎல் 2022 தொடரில் ரோஹித் ஷர்மா 14 போட்டிகளில் 19. 14 சராசரியுடன் 268 ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார். ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை. இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டி:

ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. இப்போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் துவங்கி நடைபெறும். அடுத்து, ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே களமிறங்க உள்ளது. அடுத்து ஏப்ரல் 11ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராகவும், 16ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராகவும் மும்பை களமிறங்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி சன் ரைசர்ஸுக்கு எதிராகவும், 22ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராகவும், 25ஆம் தேதி நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸுக்கு எதிராகவும் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்