ஆப்நகரம்

இப்படி கேட்ச் பிடிச்சா அவுட்டாகுறது கூட சந்தோஷம் தான் - கோலி பெருமிதம்

டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் கோலியின் கேட்சை மிக அருமையாக டிரெண்ட் போல்ட் பிடித்தது குறித்து கோலி புகழ்ந்துள்ளார்.

Samayam Tamil 22 Apr 2018, 3:19 pm
பெங்களூரு : டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் கோலியின் கேட்சை மிக அருமையாக டிரெண்ட் போல்ட் பிடித்தது குறித்து கோலி புகழ்ந்துள்ளார்.
Samayam Tamil you dont feel bad getting out to a catch like that virat kohli
இப்படி கேட்ச் பிடிச்சா அவுட்டாகுறது கூட சந்தோஷம் தான் - கோலி பெருமிதம்


நேற்று நடந்த ஐபிஎல் 19வது லீக் போட்டியில் டெல்லி -பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபார கேட்ச் :
இந்த போட்டியின் போது பெங்களூரு கேப்டன் விராட் கோலி பவுண்டரி லையனுக்கு தூக்கி அடித்த பந்தை, டெல்லியின் ட்ரெண்ட் போல்ட் மிக அற்புதமாக தவ்வி கேட்ச் பிடித்தார்.


கோலி பாராட்டு:
எந்த ஒரு வீரரும் அவுட்டானால் வருத்தப்பட தான் செய்வார்கள். ஆனால் ட்ரெண்ட் போல்ட் போல் பிடித்தது போன்று அற்புதமான கேட்ச்சால் அவுட்டாவது கூட வருத்தம் தராது என கோலி கூறியுள்ளார்.

காம்பிர் நெகிழ்ச்சி:அதே போல் டெல்லி கேப்டன் கெளதம் காம்பிர், ட்ரெண்ட் போல்ட் பிடித்த கேட்ச் நம்ப முடியவில்லை. அவர் பொதுவாக இடது கை பழக்கம் கொண்டவர். ஆனால் கோலி கொடுத்த கேட்சை தன் வலது கையால் மிக அருமையாக பிடித்தது வியப்பை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்