ஆப்நகரம்

‘உலகக் கோப்பைய’...ஏன் ஜெயிக்க முடியலைனு தெரியுமா? காரணத்தை விளக்கிய யுவராஜ்!

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முடியாததற்கான காரணத்தை யுவராஜ் விளக்கியுள்ளார்.

Samayam Tamil 5 May 2022, 1:32 pm
இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டில்தான் உலகக் கோப்பை வென்றது.
Samayam Tamil இந்திய அணி


அந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு முன்பு 2011ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையையும், 2007-ல் டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வென்றிருந்தது. இந்த மூன்று கோப்பையையும் பெற்றுக்கொடுத்தது மகேந்திரசிங் தோனிதான்.

அதன்பிறகு 2014 டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் இந்தியா இறுதிப் போட்டிவரை முன்னேறியது. 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரையும், கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுடனும் இந்தியா அணி திரும்பியது.

2019, 2021ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், படுமோசமாக சொதப்பியது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் இந்தியா இப்படி உலகக் கோப்பையில் சொதப்புவது குறித்து 2007, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

யுவராஜ் சிங் பேட்டி:

தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், ‘‘2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றபோது, எங்கள் ஒவ்வொருவருக்கும் நிலையான பேட்டிங் ஆர்டர் இருந்தது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போது நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லை. இந்த குறையை சரி செய்யாமலேயே அவர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்றனர். 2003 உலகக் கோப்பையின்போது முகமது கைப், மோங்கியா, நான் ஆகிய மூவரும் கிட்டதட்ட 50 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளவர்களாக இருந்தோம். மிடில் வரிசையில் இருக்கும் பிரச்சினையை சரிசெய்யாமல் இருப்பதால்தான், இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை’’ எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்