ஆப்நகரம்

இது ஐபிஎல்.,லா.. இல்ல சிபிஎல்.,.லா.... மிரட்டும் விண்டீஸ் வீரர்கள்...!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கீமோ பவுல் இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.

Samayam Tamil 15 Apr 2019, 11:59 am
ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கீமோ பவுல் இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.
Samayam Tamil Keemo Paul
Keemo Paul


இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.

லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது. வரும் மே 5ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கிறது. இன்னும் நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை வெளியிடவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த 30வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி, டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி18.5 ஓவரில் 116 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கீமோ பவுல்:
இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் பேர்ஸ்டோவ், வில்லியம்சன், பூயி ஆகியோரை அவுட்டாக்கிய கீமோ பவுல் இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்