ஆப்நகரம்

என்னை ஜெயிக்க முடியாது: ‘தல’ ரசிகர் ஸ்ரீசாந்தின் ‘வலிமை’ பயணம்!

நான் நிச்சயம் திரும்ப வருவேன் என ஸ்ரீசாந்த் பேசியுள்ளார்.

Samayam Tamil 13 Feb 2021, 7:26 am
பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்து வெளியிட்டுள்ளது. இதில் அர்ஜுன் டெண்டுல்கர் உட்பட மொத்தம் 292 பேர் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல் தொடரின்போது சூதாட்ட புகாரில் சிக்கி, கிரிக்கெட் விளையாட ஆயுள் தடை பெற்று, பின்னர் தடையிலிருந்து விடுதலை பெற்ற கேரள வீரர் ஸ்ரீசாந்த் உட்பட பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sreesanth


இந்நிலையில் இதுகுறித்து, காரில் பயணித்தவாறு வீடியோ ஒன்றை எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ள ஸ்ரீசாந்த், ‘தல’ அஜித் பாணியில் தான் திரும்ப வருவேன் எனத் தெரிவித்துள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர்.

மரங்கள் நிறைந்த பகுதியில் பயணிக்கும் காரில் ஸ்ரீசாந்த் அமர்ந்திருக்கிறார். காரில் இருக்கும் ஸ்பீக்கரில் விவேகம் படத்தில் அஜித் பேசும் வசனம், ’இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிறவரைக்கும், எவனாலும் எங்கேயும் எப்பவும்...’ அதனைத் தொடர்ந்து பேசும் ஸ்ரீசாந்த், “என்ன ஜெயிக்க முடியாது. வருவேன், ஸ்பீடா வருவேன், கண்டிப்பா வருவேன், லேட்டஸ்டா வருவேன். ஸ்ரீ நிச்சயம் வருவான். உங்கள் ஆதரவுக்கு நன்றி. நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். இது சத்தியம்” எனப் பேசி முடித்தார். அதனைத் தொடர்ந்து தல, விடுதலை பாடம் ஒலிக்கத் துவங்கியது. அதனை ஸ்ரீசாந்த் ரசித்து கேட்கும் வகையில் அந்த ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது.
நதீம் நீக்கம்: குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்குமா?
இதனை அஜித்தின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தவர் என்பதற்கு இதுதான் சான்று. தமிழ்நாட்ட தாண்டுனா தெரியாதுடானு சொன்ன குரூப்ப யாராவது பாத்தீங்களா எனப் பதிவிட்டு வருகின்றர்.

பத்திரிகை ஒன்றுக்கு பேட்டிகொடுத்த ஸ்ரீசாந்த், 2011ஆம் ஆண்டு கிறிஸ் கெய்லுக்கு நடந்த மேஜிக் எனக்கும் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். “கிறிஸ் கெய்லுக்கு நடந்ததுபோல் எனக்கும் நடக்கும் என நம்புகிறேன். அவரை யாரும் ஏலம் எடுக்காத நிலையில் அதிர்ஷ்டம் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன் மழை பொழிந்தார். எதுவும் நடக்கலாம்” எனக் கூறினார்.
காயத்தால் அவதிப்படும் இங்கிலாந்து பௌலர்: அணியிலிருந்து விடுவிப்பு!
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின்போது அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் டிர்க் நானெஸ் காயத்தால் அவதிப்பட்டதால், கெய்ல் மாற்று வீரராகப் பெங்களூர் அணியில் இணைந்து யூனிவர்ஷல் பாஸ் என்பதை நிரூபித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்