ஆப்நகரம்

வெற்றியை நெருங்கும் ஆஸி.,: இங்கிலாந்து தடுமாற்றம்: மழையால் ஆட்டம் ரத்து!

இங்கிலாந்து அணிக்கு எதிராக பெர்த்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

TOI Sports 17 Dec 2017, 6:15 pm
பெர்த்: இங்கிலாந்து அணிக்கு எதிராக பெர்த்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
Samayam Tamil 3rd test australia close to ashes glory as england lose four wickets
வெற்றியை நெருங்கும் ஆஸி.,: இங்கிலாந்து தடுமாற்றம்: மழையால் ஆட்டம் ரத்து!


ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பாரம்பரிய ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

ஸ்மித் இரட்டை சதம்:
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 403 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்மித் (239) இரட்சை சதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தடுமாற்ற துவக்கம்:
இதையடுத்து 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு குக் (14), ஸ்டோன்மேன் (3), ரூட் (14) அடுத்ததடுத்து அவுட்டாகினர். வின்சி (55) அரைசதம் அடித்து அவுட்டானார்.

மழை குறுக்கீடு:
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், நான்காவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது.

3rd Test: Australia close to Ashes glory as England lose four wickets

அடுத்த செய்தி

டிரெண்டிங்