ஆப்நகரம்

சச்சினுக்கு அடுத்து தோனி தான் பெஸ்ட் - கிராண்ட் வரவேற்பு!

சச்சினுக்கு அடுத்தபடியாக சென்ற இடமெல்லாம் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளவர் தல தோனி. இவர் எங்கு சென்றாலும் அவருக்கென சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

TOI Sports 22 Oct 2017, 4:40 pm
மும்பை : சச்சினுக்கு அடுத்தபடியாக சென்ற இடமெல்லாம் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளவர் தல தோனி. இவர் எங்கு சென்றாலும் அவருக்கென சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது.
Samayam Tamil a standing ovation for ms dhoni as he walks into bat at the wankhede stadium
சச்சினுக்கு அடுத்து தோனி தான் பெஸ்ட் - கிராண்ட் வரவேற்பு!


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைப்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்த போட்டியின் போது பேட்டிங் செய்ய களமிறங்கிய தோனிக்கு மற்ற மைதானங்களில் ரசிகர்கள் கொடுத்த அதே வரவேற்பு சற்றும் குறையாமல் கொடுக்கப்பட்டது.

சச்சினுக்கு சொந்த ஊரான மும்பையில் தற்போது போட்டி நடைப்பெற்று வருகின்றது. இங்கு சச்சின் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வருகின்றாரோ அப்போதெல்லாம், அவருக்கென தனி வரவேற்பு ரசிகர்கள் கொடுப்பது வழக்கம்.

சச்சினுக்கு அடுத்தபடியாக, தோனிக்கு அதே வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர்.

A standing ovation for @msdhoni as he walks into bat at the Wankhede Stadium #INDvNZ pic.twitter.com/HCrcYLoiz8 — BCCI (@BCCI) October 22, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்