ஆப்நகரம்

’மிஸ்டர்-360’ டிகிரி டிவிலியர்சுக்கு இன்று பிறந்தநாள்!

தென் ஆப்ரிக்க அணியின் ’மிஸ்டர்-360’ டிகிரி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Samayam Tamil 17 Feb 2018, 12:13 pm
ஜோகானஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியின் ’மிஸ்டர்-360’ டிகிரி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Samayam Tamil a very happy birthday to abdevilliers17 mr360
’மிஸ்டர்-360’ டிகிரி டிவிலியர்சுக்கு இன்று பிறந்தநாள்!


தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் ’மிஸ்டர்-360’ டிகிரி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ். இவர், கடந்த 2004ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.

சுத்தி அடிக்கும் சூறாவளி:
தொடரந்து 2005ல் அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்நிலையில் பேட்டிங்கில் மைதானத்தின் அனைத்து பக்கமும் பந்தை அனுப்புவதில் இவர் ‘கில்லாடி’.

சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்க அணிக்காக இதுவரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து 19,587 ரன்கள் எடுத்துள்ளார்.

* தவிர, ஒருநாள் அரங்கில் அதிவேக அரைசதம் (16 பந்துகள்), அதிவேக சதம் (31 பந்துகள்), அதிவேக 150 ரன்கள் (64 பந்துகள்) உள்ளிட்ட சாதனைக்கு சொந்தக்காரர்.

* தவிர, 21 டெஸ்ட் சதம் (அதிகபட்சம் 278*), 25 ஒருநாள் சதம் (அதிகபட்சம் 176) என மொத்தமாக 46 சதம் விளாசியுள்ளார். இவர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

A very happy birthday to ABdeVilliers17 Mr36

அடுத்த செய்தி

டிரெண்டிங்