ஆப்நகரம்

கிரிக்கெட்டை ஆட்சி செய்தவர் சச்சின்: பாகிஸ்தான் வீரர் புகழாரம்!

சச்சின் டெண்டுல்கர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Nov 2020, 11:19 am
லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது காலகட்டத்தில் கிரிக்கெட் உலகை முழுமையாக ஆட்சி செய்தார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்விப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sachin tendulkar


சச்சின் டெண்டுல்கரிடம் உள்ள சிறப்பு என்னவென்றால், ஓய்வுபெற்று 7 ஆண்டுகளைக் கடந்தும்கூட இன்னமும் எதிரணி வீரர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவருகிறார். இதற்குச் சான்று, தற்போது சச்சின் குறித்துப் பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்விப் ஜாவேத்தான். இவர் லிட்டில் மாஸ்டர் குறித்து சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, தனது சகாப்தத்தில் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்தவர் சச்சின் எனக் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

“சச்சின் திறமையான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. தனது காலகட்டத்தில் கிரிக்கெட் உலகைத் தனியாளாக ஆட்சி செய்தார். தனக்கு நிகர் வேறுயாருமில்லை என்று கூறும் அளவிற்கு அற்புதமான சாதனைகளை எல்லாம் படைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

கொல்கத்தா கேப்டனை மாற்றியது ஏன்?: அகர்கர் சந்தேகம்!

சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் பூர்த்தி செய்து, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களும் குவித்துள்ளார்.

வார்னர், ஸ்மித் இருந்தா என்ன, ஒண்ணும் பண்ண முடியாது: புஜாரா துணிச்சல் பேச்சு!

மேலும் பேசிய அக்விக், கிரிக்கெட் உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தது குறித்தும் சில வார்த்தை உதிர்த்தார். “அக்காலத்தில் நடுவர் சொல்வதுதான் தீர்ப்பு. அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தொழில்நுட்பத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்