ஆப்நகரம்

டிவிலியர்ஸுக்குப் பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்!

மிஸ்டர் 360 என அழைக்கப்படும் ஏபி டிவிலியர்ஸ் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

Samayam Tamil 21 Nov 2020, 10:22 am
ஏபி டிவிலியர்ஸ்-டேனியலே தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியைக் கடந்த ஜூன் மாதம் அறிவித்த டிவிலியர்ஸ், தற்போது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகர்ந்துள்ளார்.
Samayam Tamil ab de


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் டிவிலியர்ஸுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவரை ஐபிஎல் தொடரில் கிளின் போல்டாக்கிய தமிழகத்தைச் சேர்த்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கும் சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிலியர்ஸ் கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் அவரை அணிக்குள் கொண்டு வந்து கோப்பை வெல்லத் தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் கடுமையாக முயற்சித்து வருகிறது.

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பாரா முகமது சிராஜ்?

இதுவரை 114 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8,765 ரன்கள் அடித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் 9,577 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,672 ரன்களும் எடுத்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் கடந்து சாதனை படைத்தார். 15 வருட கிரிக்கெட் வாழ்வில் மூன்று முறை ஐசிசி ஒருநாள் அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்