ஆப்நகரம்

இது வெறும் ஆரம்பம் தான்: சாம்பியன் டிராபியில் இருக்கு : டிவிலியர்ஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி வெறும் ஆரம்பம் தான் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதே தனது கனவு என தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 20 Feb 2017, 12:37 pm
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி வெறும் ஆரம்பம் தான் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதே தனது கனவு என தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ab de villiers calls odi series opener perfect preparation for champions trophy
இது வெறும் ஆரம்பம் தான்: சாம்பியன் டிராபியில் இருக்கு : டிவிலியர்ஸ்!


நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 5 ஒருநாள், 3 டெஸ்ட், 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.

இதில் தென் ஆப்ரிக்க அணி, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,’அனுபவ ரீதியாக பார்க்கும் போது இந்த வெற்றிக்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். காலத்தின் படி இந்த வெற்றிக்கு 10 க்கு முட்டை மதிப்பெண் தான் கொடுப்பேன். ஆனால் இந்த வெற்றி இங்கிலாந்தின் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரு முதல்படிக்காட்டுதான்,’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்