ஆப்நகரம்

சதம் அடித்த ரசித் கான் - தன் முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தல்

ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில், சுழல்பந்து வீரர் ரசித் கான், இந்திய கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை கைப்பற்றி, தனது முதல் விக்கெட் கணக்கை தொடங்கியுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2018, 6:44 pm
பெங்களூரு : ஆப்கானிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில், சுழல்பந்து வீரர் ரசித் கான், இந்திய கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை கைப்பற்றி, தனது முதல் விக்கெட் கணக்கை தொடங்கியுள்ளார்.
Samayam Tamil rashid khan


ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டி விளையாட ஐசிசி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இன்று, ஆப்கான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெஸ்ட் நம்பர் 1 அணியான இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது.

தவான், முரளி விஜய் சதம்:
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த தவான் அதிவேகமாக 96 பந்தில் 107 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். விஜய் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மூன்றாவது வீரரான கேஎல் ராகுல் அரைசதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார்.

ரசித் சதம் :
டி20 போட்டியில் நம்பர் 1 வீரராக இருக்கும் ரசித் கான் டெஸ்ட் போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. டி20 போட்டிகளில் அதிக டாட் பந்துகளை வீசிய ரசித் கானுக்கு, இன்றைய டெஸ்ட் போட்டியில் பலத்த ஏமாற்றம் தான் காத்திருந்தது.
17 ஓவர்கள் வரை அவரால் ஒரு மெய்டன் ஓவர் கூட வீச முடியாமல், ரன்களை வாரி வழங்கினார்.

முதல் விக்கெட் :

ரசித் கானின் முதல் விக்கெட் அவர் வீசிய 21வது ஓவரில் தான் கிடைத்தது. இந்திய கேப்டன் ரஹானேவை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் விக்கெட் கணக்கை தொடங்கினார்.



இதுவரை 23 ஓவர்கள் வீசிய ரசித் 115 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்