ஆப்நகரம்

ஷாக்சி போட்ட சவுண்டுக்கு அதிரடி ஆக்‌ஷன்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் கார்டு விவரங்கள் லீக் செய்த தனியார் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

TOI Sports 29 Mar 2017, 2:57 pm
புதுடில்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் கார்டு விவரங்கள் லீக் செய்த தனியார் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil after sakshis tweet uidai blacklists agency that leaked ms dhonis aadhaar details
ஷாக்சி போட்ட சவுண்டுக்கு அதிரடி ஆக்‌ஷன்!


இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பை (டி-20, 50 ஓவர், மினி உலகக் கோப்பை) வென்று காட்டிய ஒரே கேப்டன் உட்பட ஏகப்பட்ட சாதனைக்கு சொந்தக்காரர்.

இவரது ஆதார் கார்டு விண்ணப்பம் உட்பட அனைத்து விவரங்களையும், மத்திய அரசால் ஆதார் கார்டு வழங்க உரிமம் பெற்ற தனியார் நிறுவனம், தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இதைப்பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி, கடுப்பாகி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத்திற்கு டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைப்பார்த்த பிரஷாத் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை தற்போது செய்தும்காட்டியுள்ளார். தோனியின் ஆதார் கார்டு விவரங்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்ட தனியார் நிறுவனத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு பிளாக்லிஸ்ட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதார் கார்டுக்கான தலைமை அதிகாரி அஜெய் பூசம் பாண்டே கூறுகையில்,’ தோனியின் விவரங்களை லீக் செய்த நிறுவனத்தை தடை செய்து விட்டோம். இது போன்ற விஷயங்களில் எப்போதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பான முழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,’ என்றார்.

New Delhi: Taking a serious view of public sharing of Aadhaar details of MS Dhoni, the Unique Identification Authority of India has blacklisted for 10 years the entity that had enrolled the ace cricketer.

அடுத்த செய்தி

டிரெண்டிங்