ஆப்நகரம்

இப்பிடி ஒரு அபூர்வ ஒற்றுமையா.... உண்மையாவே குக் ரொம்ப அதிர்ஷ்டசாலி தான்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெடில், சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் குக், டெஸ்ட் அரங்கில் அபூர்வ ஒற்றுமையுடன் விடைபெறவுள்ளார்.

Samayam Tamil 10 Sep 2018, 6:40 pm
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெடில், சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் குக், டெஸ்ட் அரங்கில் அபூர்வ ஒற்றுமையுடன் விடைபெறவுள்ளார்.
Samayam Tamil 7


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடக்கிறது. இப்போட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து, 154 ரன்கள் முன்னிலை பெற்றது. குக் (46), ரூட் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

வரலாறு.....
இந்நிலையில் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, குக் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி செல்கிறது.

இதையும் படிக்க: சங்ககரா சாதனையை முறியத்து வரலாறு படைத்த ‘குக்’!

இந்நிலையில் டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் குக் ஐந்தாவது வீரராக இணைந்தார். தவிர, டெஸ்ட் அரங்கில் தனது 33வது சதத்தை குக் பூர்த்தி செய்தார்.

தவிர, டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாறு படைத்தார்.

இப்படி ஒரு ஒற்றுமையா?
இந்நிலையில் கடந்த 2006ல் இந்திய அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகமான குக், அந்த டெஸ்டின் (60 & 104*) இரு இன்னிங்சில் அரைசதம், சதம் அடித்து அசத்தினார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பின், ஓவலில் பங்கேற்கும் இந்திய அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்டின் இரு இன்னிசில் (71 & 109*) அரைசதம், சதம் விளாசி அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகவும் அபூர்வ ஒற்றுமையாகும்.

இதையும் படிக்க: அபூர்வ சாதனையில் 'அஞ்சா'வது ஆளா சேர்ந்த அலெஸ்டர் குக்!

துவக்க வீரராக அசத்தல்:
தவிர, டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த துவக்க வீரர்கள் பட்டியலில் குக் இரண்டாவது இடம் பிடித்தார்.

வீரர் சதங்கள் எண்ணிக்கை

கவாஸ்கர் (203 இன்னிங்ஸ்) - 33 சதங்கள்
அலெஸ்டர் குக் (278 இன்னிங்ஸ்) - 31 சதங்கள்
மாத்யூ ஹேடன் (184 இன்னிங்ஸ்) - 30 சதங்கள்
கிரேம் ஸ்மித் (196 இன்னிங்ஸ்) - 27 சதங்கள்


இரண்டாவது வீரர்:
தவிர, டெஸ்ட் அரங்கில் கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் குக் இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்தியாவின் அசாருதின் உள்ளார்.

வீரர் முதல் டெஸ்ட் கடைசி டெஸ்ட்
அசாருதீன் (இந்தியா) 110 & - 9 & 102
குக் (இங்கிலாந்து) 60 & 104 - 71 & 116*


Alastair Cook, India tour of Ireland and England, England, India, IND in ENG 2018, England, India, Cricket, இந்தியா, இங்கிலாந்து, குக்

அடுத்த செய்தி

டிரெண்டிங்