ஆப்நகரம்

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்...!

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணி பங்கேற்கும் போட்டியில் இருந்து இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

Samayam Tamil 12 Jan 2020, 8:21 pm
நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய ஏ அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ளது.
Samayam Tamil Hardik Pandya


பாண்டியா விலகல்
இந்நிலையில் இதில் சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்ட இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பங்கேற்கயிருந்தார். ஆனால் தற்போது தேவையில்லாமல் சர்வதேச போட்டிகளுக்கு முன் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பாண்டியாவின் பயிற்சியாளர் தெரிவித்ததால் இதில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

சந்தேகமே இல்லை
இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவின் பயிற்சியாளர் ரஜினிகாந்த் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா 100 சதவீதம் உடற்தகுதியுடன் தான் உள்ளார். ஆனால் அவரின் பணிச்சுமையை அதிகரிக்க விரும்பவில்ல. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் முன்பாக அவர் கூடுதல் சுமையை ஏற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை எவ்வித உடற்தகுதி தேர்வும் நடக்கவில்லை.

நிச்சயம் தேர்வு ஆவார்
பிட்னஸ் தேர்வில் தோல்வியடைந்ததாலோ அல்லது முழு உடற்தகுதி இல்லாததாலோ நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்காமல் விலகவில்லை. தற்போது யோ யோ டெஸ்ட் வைத்தால் கூட ஹர்திக் 20 மார்க் எடுப்பார். ஹர்திக் பவுலிங் செய்வது தான் சிக்கலே. அப்படி அவர் பவுலிங் செய்வதால், காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. சர்வதேச போட்டிகளில் அவர் பவுலிங் செய்வதற்கு இன்னும் சில வேலைகள் பாக்கியுள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்