ஆப்நகரம்

அடி விழுந்தது மும்பை அணிக்கு மட்டுமல்ல... அம்பதி ராயுடுவுக்கும் தான்

புனே : மும்பை மற்றும் புனே அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2017, இரண்டாவது போட்டியில் அம்பதி ராயுடு காயம் ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்டார்.

TOI Sports 7 Apr 2017, 12:38 am
புனே : மும்பை மற்றும் புனே அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2017, இரண்டாவது போட்டியில் அம்பதி ராயுடு காயம் ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்டார்.
Samayam Tamil ambati rayudu injured his groin
அடி விழுந்தது மும்பை அணிக்கு மட்டுமல்ல... அம்பதி ராயுடுவுக்கும் தான்


புனேவில் நடந்த ஐபிஎல் 2017, 10வது சீசனின் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகள் மோதியன. இந்த போட்டியில் புனே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் அம்பதி ராயுடுவுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்க ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்லப்பட்டார்.



இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு ராசியில்லாதது போல. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணியில் ஏதேனும் ஒரு வீரராவது அடிபட்டு அவதிப்படும் நிலை தான் உள்ளது.

Ambati Rayudu is being stretchered off the field. "We reckon it could be groin or hamstring," says Sanjay Majrekar on air.

அடுத்த செய்தி

டிரெண்டிங்