ஆப்நகரம்

கணக்கு வழக்கு தெரியாம, கண்ணை மூடிக்கிட்டு பவுலிங் போட்ட அஷ்வின்!

வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்திய வீரர் அஷ்வின் ஒரு ஓவரில் 7 பந்துகளை வீசினார்.

TOI Sports 15 Jun 2017, 6:45 pm
பர்மிங்ஹாம்: வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்திய வீரர் அஷ்வின் ஒரு ஓவரில் 7 பந்துகளை வீசினார்.
Samayam Tamil ashwin bowled 7 balls in a over
கணக்கு வழக்கு தெரியாம, கண்ணை மூடிக்கிட்டு பவுலிங் போட்ட அஷ்வின்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது.

பர்மிங்ஹாமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை, ‘பி’ பிரிவில் முதல் இடம்பிடித்த இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. இதில், போட்டியின் 40வது ஓவரை வீசிய இந்திய வீரர் அஷ்வின், அந்த ஓவரில் 6 பந்துகளை வீசி முடித்த போதும், 7வது பந்தை வீசினார். இந்த பந்து வைடாக, அநாவசியமாக, 8வது பந்தை வீசினார்.

இதை அம்பயரும் கவனிக்கவில்லை. ஆனால் அந்த ஓவர் முடிந்த பின் இந்திய கேப்டன் கோலி, அம்பயரிடம் சைகையால் கேட்டார். செய்த தவறை மாற்ற முடியாது என்பதால் அம்பயரிடமிருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அஷ்வின், விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 54 ரன்கள் வழங்கினார். தவிர, பீல்டிங் செய்த போது மகமதுல்லாவுக்கு ஒரு கேட்ச்சையும் கோட்டைவிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்