ஆப்நகரம்

வார்னர் பேட்டிங் செய்யவந்தா அஸ்வினுக்கு ஒரே குஷி தான் - புஜாரா

வார்னர் பேட்டிங் செய்ய களமிறங்கினாலே அஸ்வின் மகிழ்ச்சியாக காணப்படுவார் என புஜாரா கூறியுள்ளார்.

TOI Sports 14 Mar 2017, 7:22 pm
வார்னர் பேட்டிங் செய்ய களமிறங்கினாலே அஸ்வின் மகிழ்ச்சியாக காணப்படுவார் என புஜாரா கூறியுள்ளார்.
Samayam Tamil ashwin is always happy when warner comes in to bat pujara
வார்னர் பேட்டிங் செய்யவந்தா அஸ்வினுக்கு ஒரே குஷி தான் - புஜாரா


அஸ்வின் அதிவிரைவாக 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்ததை கிண்டல் செய்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புஜாரா பேசியுள்ளார்.
புஜாரா தெரிவித்துள்ளதாவது :

ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் பேட்டிங் செய்ய வந்துவிட்டாலே அஸ்வின் குஷியாகி விடுவார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக வார்னர் விளையாடிய 12 போட்டிகளில், 9 முறை அஸ்வினின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.



இதன் காரணமாக வார்னர் எப்போ பேட்டிங் செய்ய வந்தாலும் அஸ்வின் குஷியாக இருப்பதை நான் பார்த்திருக்கின்றேன் என வார்னரை கிண்டலடிக்கும் விதமாக புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்