ஆப்நகரம்

INDW vs PAKW: ‘எளிய இலக்கு’...துரத்த திணறிய இந்திய மகளிர் அணி: பாகிஸ்தான் மகளிர் அபார வெற்றி!

இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றியைப் பெற்றது.

Samayam Tamil 7 Oct 2022, 4:22 pm
மகளிர் ஆசியக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
Samayam Tamil பாகிஸ்தான் மகளிர் அணி


இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, அமீரகம், மலேசியா மகளிர் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பாகிஸ்தான் மகளிர் அணி கடைசியாக தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக படுமோசமாக தோற்ற நிலையில், இன்று இந்திய மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் மகளிர் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில் ஓபனர்கள் முனிபா அலி 17 (17), அமீன் 11 (14) ஆகியோர் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஒமையா சொஹாலி 0 (2) டக் அவுட் ஆனார்கள். இதனால், பாகிஸ்தான் அணி நெருக்கடியில் இருந்த நிலையில் கேப்டன் மரூப் 32 (35), நீடா தர் 56 (37) ஆகியோர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 137/6 ரன்களை சேர்த்தது.

இந்திய மகளிர் இன்னிங்ஸ்:

எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் ஓபனர்கள் மேக்னா 15 (14), ஸ்மிருதி மந்தனா 17 (19) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து ரெட்ரிஹுஸ் 2 (8) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்.

அடுத்து ஹேமலதா 20 (22), பூஜா வஸ்டகர் 5 (8), தீப்தி ஷர்மா 16 (11), ஹர்மன்ப்ரீத் கௌர் 12 (12) போன்ற அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் கடைசி மூன்று ஓவர்களில் 42 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது ரீசா கோஷ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 26 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், அடுத்து டெய்ல் என்டர்ஸ் மட்டுமே இருந்ததால், இந்திய அணி 19.4 ஓவர்களில் 124/10 ரன்களை மட்டும் சேர்த்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்