ஆப்நகரம்

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

முதல் ஆஷஸ் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

TOI Sports 26 Nov 2017, 10:29 am
பிரிஸ்பேன்: முதல் ஆஷஸ் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
Samayam Tamil australia need 170 runs to win the first ashes test
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., அணிக்கு 170 ரன்கள் இலக்கு!


ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாரம் பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடக்கிறது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் ஜோ ரூட் (51), மொயின் அலி (40), பேரிஸ்டோவ் (42) ஆகியோர் மட்டும் கைகொடுக்க இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 170 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க், ஹசில்வுட், லியான் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்