ஆப்நகரம்

ஜூனியர் உலகக் கோப்பை பைனல்: மழையால் ஆட்டம் நிறுத்தம்

ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 217 ரன்களை இந்திய அணி சேஸ் செய்யும் நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

Samayam Tamil 3 Feb 2018, 11:02 am
ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 217 ரன்களை இந்திய அணி சேஸ் செய்யும் நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
Samayam Tamil australia u19 vs india u19 play stopped due to rain
ஜூனியர் உலகக் கோப்பை பைனல்: மழையால் ஆட்டம் நிறுத்தம்

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்தது.

அந்த அணி 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மெர்லோ 76 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் இஷான், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் அன்குல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சிவம் மவி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

எளியை இலக்கை விரட்டி களம் கண்ட இந்திய அணி, 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்